குருவராஜப்பேட்டைக்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம்..!

குருராஜப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்து, 14 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜப்பேட்டையில் 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை அமைச்சர் காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அவர் 14 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *