
இந்தியாவில்ல் 74 விமான நிலையங்கள் இருந்ததாகவும், இப்போது 150க்கு மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்குப் பயணிகள் விமானப் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். புதிய முனையக் கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களே இருந்ததாகவும், தமது பத்தாண்டுக்கால ஆட்சியில் புதிதாக 74 விமான நிலையங்கள் கட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆண்டுதோறும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், விமான நிறுவனங்கள் புதிதாக இரண்டாயிரம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.வக்பு வாரியத்தின் பெயரில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலக் கொள்ளையர்கள் அனுபவித்து வருவதாகவும், சட்டத் திருத்தத்தின் மூலம் ஏழை முஸ்லிம்கள் பயனடைவர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
