T. Udhayasuriyan: கல்வித்துறையில் முதல்வர் எப்பொழுதும் கூடுதல் கவனம் செலுத்துவார்!

Advertisements

கல்வித்துறையில் முதல்வர் எப்பொழுதும் கூடுதல் கவனம் செலுத்துவார் மாணவ மாணவிகள் மேற்படிப்பிற்கு என்று எந்த பயமும் இன்றி பயணிக்கலாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எடுத்து வாய் நத்தம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து வழிதடத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு புதிய பேருந்து வழித்தடத்தை உருவாக்கிக் கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடுத்துவாய் நத்தம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தை துவங்கி வைத்தார்.

இந்த வழித்தடமானது கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே எடுத்து வாய் நத்தம் கிராமத்தில் இரவு 9 மணி அளவில் சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகின்றது எனவே மலை கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு இலகுவாக சென்னைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் எடுத்து வாய் நத்தம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து வழித்தடம் துவங்கப்பட்டிருக்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து எடுத்து வாய் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவசம் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் 115 மிதி வண்டிகள் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது 1980 களில் பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றால் 15 ரூபாய் அட்டை ஒன்று வழங்கி விடுவார்கள் அதை ஒருமுறை குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே செல்ல முடியும் அதன்பின்பு டோக்கன் முறையில் வழங்கப்பட்டது .

அந்த அட்டைகளையும் டோக்கனங்களையும் வைத்து குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும் என்பதால் மேற்படி நூலகம் அறிவு சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மிகவும் கடினமாக சூழல் இருந்து வந்தது அப்போது நான் எம்எல்ஏவாக இருந்த பொழுது சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது முதல்வராக இருந்த பொழுது இது போன்ற மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் வழங்கப்படும் டோக்கன்களை வைத்து வெகு தூரம் பயணிக்க முடியாத காரணத்தினால் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை வைத்திருந்தேன்.

அதை தற்போது முதல்வராக இருக்கும் மு க ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக இருந்த பொழுது அதை நான் வழிமொழிகிறேன் என்று கூறிய பின் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் உதயசூரியன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தி தருகிறோம் என்று ஆணையை பிறப்பித்தார் அதனால் தற்போது நீங்கள் இலவச பேருந்தில் பயணித்துக் கொண்டு வருகிறீர்கள் அதுமட்டுமின்றி உங்களது குடும்பத்தில் அட்டைக்கு ஆயிரம் ரூபாயும் பெண் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கு ஆயிரம் ரூபாயும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகள் போன்ற பல திட்டங்களை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது எனவே மாணவராகிய நீங்கள் நல்ல முறையில் படித்து நல்ல பணிகளில் சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *