Police Station In Alangulam: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Advertisements

பீடிசுற்றியகூலியைபெற்றுதரக்கோரிஆலங்குளம்காவல்நிலையத்தைபெண்கள்முற்றுகையிட்டனர்.இச்சம்பவம் ஆலங்குளத்தில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், செட்டியூர், மேட்டூர், அகரகட்டு, லாலா குடியிருப்பு, ஆய்க்குடி, வீரசிகாமணி, குமாரசாமிபுரம், நெல்லை மாவட்டம் கூடங்குளம், மேலப்பாளை யம் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் கேரளமாநிலத்தைச் சேர்ந்த தனியார் பீடி கம்பெனி (கிங்) பீடி தயாரித்து வந்து
ள்ளது.இதில் சுமார் 50 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

1500 கூலித் தொழிலாளர்கள் பீடி சுற்றி வந்துள்ளனர்.அந்தத் தனியார் பீடி நிறுவனம் தான் நஷ்டத்தில் இயங்கு வதாகக் கூறி திடீரெனச் சுமார் 12 கிளைகளைக் காலி செய்துள்ளது.இதில் 1500 பெண்களுக்கு ஒரு வாரம் தாங்கள் பீடி சுற்றிய கூலியை நிர்வாக ம் கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம்,5 வருட போனஸ், 2 வருடபிஎப் ஆகியவற்றை கொடுக்காமல் கிளைக ளை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் அந்தத் தனியார் பீடி கம்பெனி ஆலங்குளத்தில் பீடி தயாரித்து கேரள மாநிலத்துக்குச் சப்ளைசெய்து வருவதாக லாலாகுடியிருப்பு பகுதியிலுள்ளபெண்கள் மத்தியில் தகவல் பரவியது.

இந்தச் சம்பவம் வேலையிழந்த கிளை ஊழியர்களுக்கும் தெரிய வந்தது. உடனே சுமார் 200 பெண்கள் மற்றும் ஆண்கள் ஆலங்குளம் வந்தனர். அந்தப் பீடி கம்பெனி செயல்படுவதை சிலர் நோட்டமிட்டனர்.அங்கு வேலைகள் நடப்பதை கண்டறிந்து ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

திடீரெனப் பெண்கள் முற்றுகை இடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்களிடம் நாளை வாருங்கள் அந்தப் பீடி கம்பெனி நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காணலாமெனப் பேசினர்.அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து கலைந்து சென்றனர் இச்சம்பவம் ஆலங்குளத்தில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *