Kanchipuram: வாக்காளர் அட்டையைச் சாலையில் கொட்டி கிராம மக்கள் மறியல்!

தலைமுறை தலைமுறையாகப் பயிர் வைத்த விவசாய நிலங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்ப்பூர் கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்துச் சாலையில் வாக்காளர் அட்டையைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்ப்பூர் கிராமத்தில் அப்பகுதி மக்கள் அதே பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பூர்விகமாக வாரிசுகள் உரிமை படி பதிவு பெற்ற ஆவணங்களுடன் நிலங்கள் இருந்து வந்த நிலையில் ரயத்துகளின் நிலங்கள் எனக் குடியானவளை நிலங்கள் என்று கூறி அனாதினம் எனத் தவறாக வகைப்பாடு செய்யப்பட்ட நிலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இது தொடர்பாகப் பலமுறை மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திலும் அப்பகுதி கிராம மக்கள் மனுக்கள் அனைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் கூறுகின்றனர். பட்டா வழங்காததால் அந்த நிலங்களை வைத்து எவ்வித செயலும் செய்ய முடியாததால் அரசு அறிவித்த சலுகைகளும் பெற முடியாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அரசுத் திட்டங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி அப்பகுதி கிராம மக்கள் குடும்பத்தாருடன் செவிலிமேடையிலிருந்து கீழம்பி செல்லும் புறநகர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தபின் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது பேச்சுவார்த்தைபின் சாலை மறியலில் கைவிட்ட பிறகு வாகனங்கள் அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *