கடனை அடைக்க கம்போடியா சென்று கிட்னியை விற்ற இந்திய விவசாயி.! 

Advertisements

மகாராஸ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் சதாசிவ் குடே. விவசாயியான இவர், அங்கு ஒரு லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளார். வறட்சியின் கோரப்பிடியில் பயிர்கள் கருகி போயின.

அதோடு, இவர் வாங்கிய மாடுகளும் இறந்து போயின. ஆனால், வட்டிக்கு கொடுத்தவர் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வரை வட்டி கேட்டுள்ளார்.

அப்படி, கடன் 74 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால், கடனை அடைக்க கூறி, வட்டிக்கு கொடுத்தவர் நெருக்கடி கொடுத்துள்ளார். நிலம், டிராக்டரை விற்றும் ரோஷனால் கடனை அடைக்க முடியவில்லை.

இது தொடர்பாக, ரோஷன் போலீசில் புகாரளித்தும் கண்டு கொள்ளவில்லை. மும்பையிலுள்ள மகாராஸ்டிர மாநில சட்டசபை முன்பு தீ குளிப்பேன் என்று எச்சரித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து,நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவின்படி, கம்போடியாவுக்கு சென்று தனது ஒரு கிட்னியை 8 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *