Periyapalayam: சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரைத் தட்டி தூக்கிய போலீஸ்!

Advertisements

பெரியபாளையம் அருகே ஆரணி  பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து ஆரணி பஜார் வீதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக 6 நபர்கள் செல்போன் மூலம் நம்பர் எழுதிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 5 நபர்களும் ஆரணி பகுதி சேர்ந்த பாலகிருஷ்ணன்(52), நாகராஜ்(60), முரளி(60), கோடீஸ்வரன்(60), சர்யையா(63), என்பதும் இவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட 5 நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 செல்போன்கள்,1 லேப்டாப், உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 5 பேர்மீதும் ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள்  யார்? யார்? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் ஆரணியில் அதிக அளவில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும், இத்தகை கூலி தொழிலாளர்களைக் குறி வைத்துப் பணம் பறிக்கும் கும்பலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *