Ponneri: தீர்மான நகலை வீசி எரிந்து அதிமுக உறுப்பினர் குமுறல்!

Advertisements

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் வாக்களித்த மக்களுக்குப் பதில் கூற முடியவில்லை என்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியவில்லை, எனக்கூறி அதிமுக உறுப்பினர்  தீர்மான நகலை வீசி எரிந்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது,

திருவள்ளூர் மார்ச்:5,திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் திமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் ஆன பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது, ஆணையர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் நகராட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லையெனக் குற்றம் சாட்டினர், மேலும் கூட்டத்தில் பேசிய அதிமுகவை சேர்ந்த நகர மன்ற துணைத் தலைவர் ஆன விஜயகுமார் உறுப்பினர்களைக் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் தீர்மான நகலைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதே போன்று 25 வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தனது வார்டில் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செயல்படுத்த முடியாததால் தனக்கு வாக்களித்த மக்களின் கேள்விக்குத் தன்னால் பதில் கூற முடியவில்லை எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக உறுப்பினர்கள் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி தீர்மான நகலை வீசி எறிந்து விட்டுக் கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது,

பொன்னேரி பேரூராட்சியாக இருந்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு 54 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மூன்று ஆண்டுகளில் அதாவது 2016 ஆம் ஆண்டு முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பேரூராட்சி தற்போது நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி இடையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பணிகளை நிறுத்தியபோது கூடுதலாக 20 கோடியே 37 லட்ச ரூபாய் அதாவது திட்ட மதிப்பு 74 கோடியே 75 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்ட போதிலும் அதே நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *