Advertisements

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாரான சூழ்நிலையை மு.க ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். இதனால் அறிவாலயம் பரபரத்து கிடக்கிறது.
தற்போதைய திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் லீக் தமிழக வாழ்வுரிமை கழகம் மற்றும் பல இயக்கங்கள் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருவதால் மேற்கொண்டு தங்கள் கட்சியை வளர்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் சக கட்சிகளிடம் இருந்து வருகிறது .அதனால் வருகிற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டு போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரையில் கண்டிப்பாக இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தொல் திருமாவளவன்.இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தருவதுடன் அமைச்சரவையிலும் இடம் தர வேண்டும் என பேச தொடங்கி இருக்கிறார்கள் . இல்லாவிட்டால் விஜய் கட்சியில் சேர போவதாகவும் மிரட்டி வருகிறார்கள்.மேலும்இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.
நாங்கள் கூட்டணியில் நீடிப்போம் என்று மதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் வைகோவுக்கு ராஜ்யசபா சீட்தராததால் அவர்களுக்குள் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன இருந்த போதிலும் வேறு வழி இல்லாமல் திமுகவை ஆதரித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கூட்டணி கட்சியினர் எப்போது என்ன முடிவு எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.அதே சமயத்தில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கி தருவதற்கு திமுகவில் இடமில்லை என்பதில் மு க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்
எனவே கூட்டணி கட்சிகள் ஒருவேளை பிரிந்து விட்டால் என்ன செய்வது என்று ஆலோசனை செய்த மு க ஸ்டாலின் தனித்து போட்டியிடுவது என்று தைரியமான ஒரு முடிவை கையில் எடுத்து வைத்திருக்கிறார் .இதன் தொடக்க திட்டம்தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டம்
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் அவர் வீடு வீடாக சென்று சந்திக்கும்படி சொல்லி இருக்கிறார் இதன் மூலம் மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு திமுகவின் செல்வாக்கு என்ன என்பது மு க ஸ்டாலினுக்கு நேரடியாக தெரிந்து விடும் .எனவே ஒரணியில் தமிழ்நாடு என்ற திட்டம் வெற்றி பெற்றால் திமுக வருகிற தேர்தலில் தனித்து களம் இறங்க தயங்கப் போவதில்லை என்பது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது.இது மட்டுமல்லாமல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த முறை பணம் வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது இது தவிர வருகிற தேர்தலில் பிரத்தியேகமான இலவச அறிவிப்புகளும் காத்திருக்கின்றன இதன் மூலம் தனித்து நின்றால் தாராளமாக வெற்றி பெற்று விட முடியும் என மு க ஸ்டாலின் நம்புகிறார்.
கூட்டணி கட்சியினர் அவரோடு இணைந்து செயலாற்றுவார்களா? அல்லது திமுக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி தொகுப்பு: திரு.போஸ்
Advertisements



