Mayor Kalpana Anandakumar: மேயருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்த பள்ளி குழந்தைகள்!

Advertisements

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாநகராட்சி மேயருக்கு பள்ளி குழந்தைகள் இனிப்புகளை ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாநகராட்சி 19 வது வார்டுக்கு உட்பட்ட  மணியகாரன்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்குச் சுமார் 700 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட இப்பள்ளியில் சமீபத்தில் குழந்தைகள் உட்காந்து படிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது.இதனைக் கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பள்ளி குழந்தைகளுக்குக் கூடுதல் கட்டிடம் கட்டி தர மாநகராட்சிமூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.அதன் அடிப்படையில் அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இதனிடையே பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி, சிவக்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர்.

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாநகராட்சி மேயருக்கு பள்ளி குழந்தைகள் இனிப்புகளை ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தமிழக முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி வாட்டர் பாட்டில்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், மற்றும் பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *