
சென்னை :
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொலை நகரமாக மாறியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களை சிரமத்திற்குள்ளாக்கி, தனது நிர்வாகத் திறமை இன்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும், 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் தலைநகரமான சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.



