மலேசியத் தமிழர்களுக்குப் பிரதமர் மோடியின் பரிசு..!

Advertisements

திருவள்ளுவரின் சிந்தனைகளையும் படைப்புகளையும் மேலும் பிரபலப்படுத்த, மலேசியாவில் திருவள்ளுவர் மையத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் மலேசியாவில் தமிழ்க் கலாச்சாரம் மிகவும் பிரபலமானது என்றும்,  அதேபோல் தமிழர் பண்டிகைகளும் பிரபலமானவை என்றும் கூறினார்.
இதையடுத்து, மாபெரும் புலவர் திருவள்ளுவரின் சிந்தனைகள் எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன. இத்தகைய, திருவள்ளுவரின் சிந்தனைகளையும் படைப்புகளையும் மேலும் பிரபலப்படுத்த, மலேசியாவில் திருவள்ளுவர் மையத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம் எனத் தெரிவித்தார். மேலும், மலேசியாவில் இருந்து இந்தியாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு திருவள்ளுவர் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *