Su Venkatesan:ரெயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது!

Advertisements

ரெயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை:சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்; புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவை உள்ளடக்கிய தென்மேற்கு ரெயில்வேக்கு 1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவின் புதிய வழித்தடங்களுக்கு 2286 கோடி அறிவித்துவிட்டு இப்பொழுது 1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 971 கோடு அறிவித்து விட்டு 301 கோடி மட்டுமே தந்துள்ளது. #வஞ்சிக்கப்படும்_தமிழ்நாடு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *