Phase 2 Metro Works : ஒப்பந்ததாரர்களுக்கு CM விஜய் போட்ட கண்டிஷன்.!

Advertisements

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க இரவு நேரக் கட்டுமானப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், குறிப்பாக பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் விடுபட்டுள்ள பணிகளை உடனடியாகத் தடையின்றி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பகல் நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இரவு நேரக் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்பதோடு, கட்டுமானப் பணிகளில் எவ்வித சமரசமும் இன்றித் தரத்தை முழுமையாக உறுதி செய்யுமாறு ஒப்பந்ததாரர்களை அவர் கேட்டுக்கொண்டார். காலக்கெடுவிற்குள் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *