ஈரான் விவகாரம் : அமெரிக்காவிற்கு இஸ்ரேல் கொடுத்த 3 முக்கிய ஆப்ஷன்கள்.!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு மூன்று தேர்வுகள் உள்ளதாக இஸ்ரேல் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் டொனால்டு டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து, இஸ்ரேல் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான சந்திப்பில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் விருப்பம் என பிரதமர் நெதன்யாகு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், உடன்பாடு, முற்றுகை அல்லது பொருளாதார அழுத்தங்களை தொடர்வது, மற்றும் ஒரு மாபெரும் தாக்குதல் என டிரம்புக்கு மூன்று தேர்வுகள் இருந்ததாகக் கூறினார்.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொதுமக்களின் விரக்தியால் ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீதான தாக்கமும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *