Elon Musk: ரஷ்யா அதிபர் உயிருக்கு ஆபத்து.. எலான் மஸ்க் எச்சரிக்கை!

Advertisements

புதுடில்லி: “உக்ரைன் ரஷ்யா போரில் ஒருவேளை புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார்” என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் குழுப் போர் , சீனா – தைவான் விவகாரம்குறித்து எலான் மஸ்க் கூறியதாவது: உக்ரைன் போரில் புடின் தோற்க மாட்டார். போரில் ஒருவேளை புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார். உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கின்றனர்.

புடினை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பினால், புடினை எதிர்த்து நிற்கக்கூடிய நபர் யார் என்பதையும் சிந்திக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அமைதியானவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அநேகமாக இப்படியானவர் யாரும் இல்லை.

போரை நீடிப்பதும் உக்ரைனுக்கு நல்லதல்ல. உக்ரைன், இஸ்ரேல், தைவானுக்கு 95 பில்லியன் டாலர் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு மட்டும் 60 பில்லியன் டாலர் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *