
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசிய போது, தாங்கள் தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றும், மற்றொரு பக்கம் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஈரானின் அனைத்து விமான எதிர்ப்பு அமைப்புகளும், பெரும்பாலான ஏவுகணைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. உலகிலேயே மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை துல்லியமாகத் தாக்கும் வாய்ப்பு தங்களிடம் இருந்தப் போதிலும், பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதால் அதை நிறுத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவது இல்லை என்று ஈரானும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் கூறினார். எனவே ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் என்று பெருமிதமாகத் தெரிவித்தார்.


