வளர்ந்த இந்தியா உருவாக்க இளைஞர்கள் முக்கிய பங்கு – பிரதமர் மோடி!

மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பொது வாழ்வில் பிரதமர் மோடி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, பாஜக சார்பில் மோட்டார் சைக்கிள் யாத்திரை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. குஜராத்தின் வாட்நகரில் இருந்து வாரணாசி வரை பயணிக்கும் சேவா யாத்திரீகர்களுடன் பிரதமர் மோடி கானொளி காட்சி வாயிலாக பேசினார்.  அப்போது, சேவை குறித்து வெறும் உபதேசம் செய்வதை தவிர்த்து சேவையாற்றுவதன் மூலமே நமது நோக்கத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த பயணத்தின்போது மக்களுக்குச் சேவையாற்றுவதன் மூலம்  ஒரு நற்காரியத்தைச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் பயணிப்பதாகவும், 2047 ஆம் ஆண்டிற்க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், இளைஞர்களின் மிக முக்கியப் பங்கை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றைய இளம் தலைமுறையினர் வளர்ந்த இந்தியாவை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பயனடைபவர்களாகவும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *