தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெறுகிறது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பருத்திப் பயிர்கள் சேதமடைந்தது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வருகிறார்.

தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் தொடர்பான சட்டமுன்வடிவை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிமுகம் செய்து வைக்கிறார். இதையடுத்து, மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு மற்றும் பொதுநிறுவனங்கள் குழு ஆகியவற்றுக்கு 16 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அரசினர் தீர்மானங்களை வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் கொண்டு வருகிறார்.

இதன் பின்னர், பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *