இடைத்தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்து வைத்திருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார். தற்போது ஓட்டை பிரிப்பதற்காக தான் திமுகவும், அதிமுகவும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதாகக் கூறினார். ஆனால் இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுக கட்சியின் நிலை காரணமாகவே அவர்கள் ராஜினாமா செய்ததாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக திமுகவை ஆதரிப்போம் என்று சொன்னால் யார் ஏற்றுக்கொள்வர்? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் ஆதரவளித்தவர்கள் உடன் சேர்ந்து பயணிப்போம் என முடிவெடுத்து ராஜினாமா செய்ததில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் செல்லும் முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் யாரும் ராஜினாமா செய்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

