“மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” – பிரவீன் சக்கரவர்த்தி!

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க விட மாட்டோம் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாடும் வகையில், ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அதன்படி தென்னிந்தியாவில் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி சென்னைக்கு வருகைத் தர உள்ளதாகக் கூறினார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, மத்தியப் பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற ஓட்டு திருட்டு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். இதனால், இந்தியா ஜனநாயக நாடு என்ற பெருமையையே இழந்துவிட்டதாகக் கூறினார். எனவே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தியாவில் யுபிஐ இலவசமாக இருப்பது அமெரிக்காவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்க அதிபரின் அழுத்தத்தின் காரணமாகவே மத்திய அரசு யுபிஐ பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *