Zelenskyy:பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்!

Advertisements

புதுடில்லி: ‘இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி: இந்திய பிரதமர் மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். அவரால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று இந்தியா. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரஷ்யா அத்துமீறிச் செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறல்களால் உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேறு வழியின்றி ரஷ்யா அதிபர் புடின் போரை முடிவுக்குக் கொண்டுவருவார்.

உக்ரைனில் குளிர்காலம் துவங்க உள்ளது. இந்த நேரத்தில் உக்ரைனின் மின் நிலையங்கள்மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மின் நிலையங்களைச் சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இந்த இக்கட்டான சூழலில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் கொள்கை மாறினால் உக்ரைனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *