
அரியலூர் மாவட்டத்தின் இந்த ஆண்டின் , முதல் ஜல்லி கட்டு போட்டி பூண்டி கிராமத்தில் தொடங்கியது
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளை கடந்து தற்போது இந்தாண்டு நடைபெறுகின்றது. இப்போட்டியில் திருச்சி , தஞ்சாவூர், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது.
மேலும் , 300 – க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர் . இதில் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் 1000 ரூபாய் முதல் 10,000 வரை ரொக்க பணம், ட்ரெஸ்ஸிங் டேபிள், பீரோ,கட்டில் சைக்கிள், சில்வர் குவளை, ஒரு பவுன் நகை ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளது .




