மத்திய அமைச்சரவைக் கூட்டம் – பிரதமர் மோடி அறிவுரை!

Advertisements
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் முழக்கம் அல்ல, அது அரசின் உறுதிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள சேவா தீர்த்தத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பிரதமர் மோடி அமைச்சர்களிடையே உரையாற்றியப் போது, விரைவான முடிவெடுத்தல் மற்றும் திறமையான நிர்வாகத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், கோப்பு பரிமாற்றங்களில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, உற்பத்தித்திறனை மேம்படுத்துமாறு அனைத்துத் துறைகளையும் கேட்டுக்கொண்டார். சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் அதே வேளையில், நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் முழக்கம் அல்ல, அது அரசின் உறுதிப்பாடு என்று தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *