“விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை” – அதிபர் எச்சரிக்கை!

விதிகளை மீறினால் ஈரான் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரான் உடனான தற்போதைய பேச்சுவார்த்தைக் குறித்து பேசிய அவர், தங்களது கடல்வழி முற்றுகை மூலம் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஈரான் எந்தக் காரணத்தைக் கொண்டும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இதை மீறினால் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *