1000 ரூபாய்…தே.மு.தி.க -போராட்டம்!

Advertisements

Kalaignar Magalir Urimai Thittam | Premalatha Vijayakanth | Protest

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்ககோரி 10-ந் தேதி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது...

சென்னை: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு திறக்கக் கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தைக் கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Kalaignar Magalir Urimai Thittam | Premalatha Vijayakanth | Protest | Cuddalore

கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார். தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி-தஞ்சாவூர், ஏ.ஆர்.இளங்கோவன்-கோவை பேராசிரியர் மகாலெட்சுமி-திருவள்ளூர் இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி-விழுப்புரம். மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத்-நாமக்கல், சுபமங்களம் டில்லிபாபு-செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதே போல் 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *