N. Sankaraiah: காலமானார்..!

Advertisements

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்..!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா இன்று காலைச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.N. Sankaraiah

சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த சங்கரய்யா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலைச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisements

80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் உள்ள சங்கரய்யா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவிற்கு வயது 102, இவருக்குத் தமிழக அரசு சார்பாகத் தகைசால் தமிழர் விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று காலைச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். N. Sankaraiah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *