தூய்மைப் பணியாளருக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி..!

Advertisements

செங்கல்பட்டு அருகே தூய்மை பணியாளார் பத்மாவிற்கு தனியார் நிறுவனம் இலவச வீட்டுமனை வழங்கி கௌரவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நெல்லி கிராமத்தில் தனியார் வீட்டுமனையைச் சேர்ந்த  தூய்மை பணியாளர் பத்மா. இவர் சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து நேர்மையுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பல தரப்பினரும் பாராட்டினர்.

இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கி அவரை பாராட்டினார். இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் தனது வீட்டுமனை பிரிவில் பத்மாவிற்கு ஒரு இடம் அன்பளிப்பாக வழங்கினார். இதன் பின்னர், பத்மாவை ஹெலிகாப்டரில் அமர வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் மறைமலைநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் தணிகாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *