
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரி கவிழ்ந்த விபத்தில், 30 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின், கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி கவிழ்ந்ததாக தெரிவித்தனர்..


