
பா.ம.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக கட்சித் தலைவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என கூறினார்.
இதனால், பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
தொடர்பு வைத்துக் கொள்ளும் பா.ம.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும் என ராமதாஸ் கூறினார்.


