ஏமன் நாட்டில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்..!

ஏமன் நாட்டில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலானப் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்றப் பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்த நிலையில், 130 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தனர். மேலும், தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள ராணுவ தலைமையகம் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *