இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும்.!

Advertisements

இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனும் அடையாள அட்டையும் வழங்கும் விழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு வங்கிக் கடன்களையும்  அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இதில் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இருவரும் துணை முதலமைச்சர் உதயநிதியைப் பாராட்டியதுடன், திமுக அரசின் திட்டங்களை வரவேற்றுப் பேசினர்.

விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அருள், சேலம் மேற்குத் தொகுதிக்குச் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கும்படி துணை முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாகக் கூறினார். இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இணைகிறாரோ அந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *