
கோவை: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஆக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை தி.மு.க., அறிவித்து உள்ளது.
கோவை மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை (ஆக.,06) நடைபெறும் எனத் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தப் பதவியைப் பிடிக்கத் தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், 29வது வார்டு திமு.க., கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கணபதி பகுதியைச் சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆவார். கோவை எம்.பி., ராஜ்குமாரின் ஆதரவாளர் ஆவார்.


