குஜராத் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பைக்கு புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த புல்லட் ரெயில் 508 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து, அங்கு காட்சிப்படுத்தப்பட்ட புல்லட் ரெயில் வடிவமைப்பு மாதிரிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன் பின்னர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


