சிலைகளைக் கரைப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாத நிலை.? அண்ணாமலை கேள்வி

Advertisements

தமிழ்நாட்டில் ஏரி குளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாத நிலையில், அவற்றைத் தூர்வாரி நீரைத் தேக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டிலும் ஏரி குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

இதை ஒரு சபதமாக ஏற்று இளைஞர்கள் ஏரி குளங்களைத் தூர்வாரி மழைக்காலத்தில் நீரைத் தேக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஊருக்கு நூறு இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், தண்ணீர் வரக்கூடிய பாதையைச் சரி செய்திட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் ஒரு காலப் பூஜை கூட நடக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *