இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
இதன் பின்னர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

