
நமது வீரமிக்க ராணுவ வீரர்களுக்காகப் பங்களித்தத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களைத் தாம் மனதாரப் பாராட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 134 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய போது, தான் கடந்த மாதம், தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தபோது கிரிஜா அம்மா என்ற ஆசிரியரைச் சந்தித்ததாகக் கூறினார். அவர், சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா உட்பட 3 பள்ளிகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட அவர், நாட்டின் வீரர்களின் நலனுக்காகத் தனது பங்களிப்பை வழங்க உறுதிபூண்டார். இதற்காகத் தனது பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைத் தேசத்தின் வீரமிக்க ராணுவ வீரர்களுக்காக நாள்தோறும் ஒரு ரூபாய் வழங்குமாறு ஊக்கமளித்தார். இதன்மூலம், ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு மொத்தம் 365 ரூபாயை வழங்கினர்.
இந்தச் சிறு பங்களிப்புகள் மூலம் ஒட்டுமொத்தமாக 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. தொடர்ந்து, கிரிஜா அம்மா இந்த முழுத் தொகைக்கான காசோலையை தன்னிடம் வழங்கியதாகக் கூறினார். மேலும், நமது வீரமிக்க ராணுவ வீரர்களுக்காகப் பங்களித்த அந்த மாணவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
IndianArmy #PMModiPraisesStudents #TNStudents #ArmyContribution #IndianSoldiers #ModiSpeech #TamilNews #BreakingNewsTamil #NationalNews



