
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை பாராட்டி பேசியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை பாராட்டிப் பேசினார்.
இதில் பிரதமர் மோடி பேசியபோது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெற்றிகரமாக நடத்தும் சீன அதிபர் ஜின் பிங்குக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதில், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேம்படுத்த உறுதியளிப்பதாகப் பிரதமர் கூறினார்.
இதனை தொடர்ந்து, நமது இருதரப்பு ஒத்துழைப்புடன் 280 கோடி மக்களின் நலன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எல்லையில் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமைதியான சூழல் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் கலந்து கொள்வதால், அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் அமைக்கடும் என கூறப்படுகிறது.

