முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு இடமில்லை – அன்புமணி விமர்சனம்

Advertisements
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பாக செயல்படும் முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு இடமில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களில் யார் சிறந்தவர் என்பதை அறிய கருத்துக் கணிப்பு நடத்தினர்.
இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 10 இடங்களில் வர முடியாத அளவுக்கு செல்வாக்கை இழந்திருக்கிறார்.  பின்னர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 57 சதவீதம் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த மு.க.ஸ்டாலின் தற்போது பாதியளவுக்கும் குறைவான ஆதரவை மட்டுமே பெற்று உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்றார். பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலின் அவர்களின் செல்வாக்கு மேலும் குறையும் என்று தெரிவித்தார். பின்னர், விடியல் தரா ஆட்சி வீழட்டும் என்றும் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *