Vande Bharat Express: முதல் உயிர் பலி!

Advertisements

வந்தே பாரத் ரயிலில் முதல் உயிர் பலி: மெய்சிலிர்க்கும் சம்பவம்!

தமிழகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலில் முதன்முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் ரயில் பயணங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் குறைந்தபட்சம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் ஒட்டு மொத்த இந்தியாவையும் இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் வந்தே பாரத ரயிலில் பயணம் செய்தபோது சேலம் ரயில்வே நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
ரயில் பயணிகளிடம் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பால் என்கிற பவுலேஷ் வயது 70 இவரது மனைவி ரோஸ் மார்க்ரேட். ஈரோட்டில் உள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பவுலேஷ் தந்து மனைவியுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் சேலத்தில் நின்று சென்றதும் பிளாட்பாரம் முடிவடைந்த நிலையில் பவுலேஷ் வெளியே தவறி விழுந்து உயிரிழந்தார்.
முன்னதாக ரயிலில் பயணம் செய்த பவுலேஷ் அதிக குளிர் என்பதால் வாசல் பகுதியில் வந்து நின்றுள்ளார் அப்பொழுது அவசரப் பட்டன மீது அவர் கை வைத்த நிலையில் கதவு திடீரெனத் திறந்து கொண்டது இதனால் தான் அவர் வெளியே தவறி விழுந்தார் என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் அவசரப் பட்டனை நன்றாக அழுத்தினால் மட்டுமே கதவு திறக்கும் என்கிற நிலையில் பவுலேஷ் சாதாரணமாகக் கை வைத்ததும் எப்படி கதவு திறந்தது என்ற கேள்விக்குறி எழுந்தது
 இதனை அடுத்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் பவுலேஷ்பயணம் செய்த சி 3 பெட்டியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்பொழுது சேலத்தில் நாலாவது பிளாட்பாரத்தில் ரயில் நின்றது இந்தச் சமயத்தில் ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து இரண்டு ரயில்வே ஊழியர்கள் ஓடி வந்து வந்தே பாரத்தில் அவசரப்பட்டனை அழுத்தி அந்த ரயில் கதவு வழியாக நாலாவது பிளாட்பாரத்தில் இறங்கிச் சென்றுள்ளனர்
அவர்கள் அவசரப் பட்டனை அழுத்திய நிலையில் பவுலேஷ் சாதாரணமாகக் கை வைத்ததும் கதவு திறந்து கொண்டது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே பாய்ண்ட் மேன்கள் தாமரைச்செல்வன் ஒய் எஸ் மீனா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா உத்தரவின் பேரில் அவர்கள்மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது.
ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்குறித்து ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *