Pinarayi Vijayan: தேவகவுடாவை விமர்சனம்!

பினராயி விஜயன் தேவகவுடாவை விமர்சித்துள்ளார்.  ஜேடிஎஸ்-பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தேவகவுடாவின் கூற்றுக்கு அதிருப்தி தெரிவித்த பினராயி விஜயன், அவரது அறிக்கை “உண்மையற்றது” மற்றும் “அபத்தமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.பினராயி விஜயன் தேவகவுடாவை  கடுமையாக சாடியுள்ளார்.  ஜேடிஎஸ்-பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க மறுத்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஜேடி(எஸ்) கட்சியின் அனைத்து மாநில பிரிவுகளும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தேவகவுடா வியாழக்கிழமை  கூறியதை  அடுத்து பினராய் விஜயன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

“கேரளாவில், ஜனதா தளம் நீண்ட காலமாக இடது ஜனநாயக முன்னணியுடன்  கூட்டணியுடன் உள்ளது. ஜனதா தளத்தின் மாநிலத் தலைமை அதன் மத்திய தலைமையின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல்  எல்.டி.எஃப்  உடன் வலுவாக இருக்கும்  தன்மை  கொண்டது.

இருப்பினும், சி.பி.ஐ. எம் அந்தக் கட்சியின் உள் பிரச்சனைகள்  மற்றும்    முதலமைச்சராகிய நானும் அவர்களின் கட்சி உள் விவகாரங்களில் தலையிடவில்லை. இது எங்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. அவர்களின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றும்  அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *