Advertisements

துபாய் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தக் குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
துபாய் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில், கப்பலின் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. மேலும், தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. தொடர்ந்து, சவுதி அரேபியாவின் அல்-கார்ஜ் மாகாணத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
Advertisements


