Pinarayi Vijayan: “பாஜகவுடன் இணக்கமா?” ராகுல் குற்றச்சாட்டுக்குப் பினராயி விஜயன் பதிலடி!

Advertisements

கோழிக்கோடு: பாரதிய ஜனதாவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

‘காங்கிரஸ் தலைவா்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவாா்கள். இடது சாரி தலைவா்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை’ என்றும் அவர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், ‘இரு மாநில முதல்வா்கள் (ஹேமந்த் சோரன், கேஜரிவால்) அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டு மத்திய பாஜக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். என்னிடம் கூட அமலாக்கத் துறையினா் 55 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனா். எனது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

கேரள முதல்வா் பினராயி விஜயன் மீதும் அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. ஆனால், அவா் இதுவரை வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படவில்லை, சிறைக்கும் செல்லவில்லை. நான் பாஜகவை 24 மணி நேரமும் விமா்சிக்கிறேன். ஆனால், கேரள முதல்வா் என்னை மட்டும் விமா்சிக்கிறாா். பாஜகவை அதிகம் விமா்சிப்பதில்லை. இதில் ஏதோ புதிா் உள்ளது’ என்றாா்.

இதன் மூலம் பாஜகவுடன் பினராயி விஜயன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறாா் என்று ராகுல் மறைமுகமாக குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில் கேரளத்தில் கோழிகோட்டில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் பினராயி விஜயன் ராகுலின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியதாவது:-

“ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தி ஏராளமான இடது சாரி தலைவா்களை சிறையில் தள்ளினாா். அப்போது நானும் கூடச் சிறையில் அடைக்கப்பட்டேன். நாங்கள் சுமாா் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தோம். ஏராளமான விசாரணைகளை எதிா்கொண்டுள்ளோம். எனவே, வழக்கு விசாரணைக்கும், சிறைக்குச் செல்லவும் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.

ஆனால், காங்கிரஸ் தலைவா்களுக்குதான் சிறைக்குச் செல்வதற்கு அஞ்சம் உள்ளது. எனவே, அவா்கள் தொடா்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து சொகுசாக வாழ்ந்துவிட்டாா்கள். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் தலைவா் அசோக் சவாண், சிறைக்கு செல்ல அஞ்சிதான் கட்சி மாறியதாக கண்ணீா் விட்டு அழுதாா் என ராகுலே கூறியுள்ளாா்.

இதன் மூலம் காங்கிரஸ் தலைவா்களுக்கு சிறை என்றால் எவ்வளவு பயம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

சிறை மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைக் காட்டி எங்களைப் பயமுறுத்தாமல் இருப்பது நல்லது. குடியுரிமை திருத்தச் சட்டம் சி ஏ ஏ பற்றிப் பேசக் காங்கிரஸ் தலைவர் பலமுறை மறுத்தபோது நான் ராகுலுக்கு எதிராகப் பேசியிருக்கிறேன்.

அவர் தனது பாரத் ஜூடோ யாத்திரையின்போது அல்லது தேர்தல் பிரச்சாரத்தின்போது சி ஏ ஏ பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

தோ்தல் நிதிப்பத்திரம் குறித்து காங்கிரஸ் விமா்சிக்கிறது. ஆனால், அக்கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும், வாரிசு அரசியல் அடையாளமான பிரியங்காவின் கணவா் வதேராவின் நிறுவனம் பாஜகவுக்கு இரு தவணைகளாக ரூ.170 கோடி தோ்தல் நிதிப்பத்திரம் அளித்துள்ளது. அதன் பிறகு அவா் மீதான வழக்கு விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன. இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம்.

காங்கிரஸ் இல்லாத பல எதிா்க்கட்சித் தலைவா்களை பழி வாங்க பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விஷயத்தில் சங்க பரிவார அமைப்புகளுடன் காங்கிரஸ் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது’ என்றும் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *