Lok Sabha Elections 2024: 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்: 62 சதவீத வாக்குப் பதிவு!

Advertisements

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும்  62.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது.

தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

வாக்குப் பதிவு விவரம்

மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் அந்தச் சமயத்தில் வந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதால் இரவு 7 மணிக்குப் பின்னரும் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடர்ந்து நீடித்தது. அதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த துல்லியமான விவரங்கள் இன்று தான் தெரிய வரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

102 தொகுதிகளிலும் சராசரியான வாக்குப் பதிவு  62.37 சதவீதமாகும். தேர்தல் ஆணையத்துக்கு நேற்று இரவுவரை கிடைத்த தகவலின் படி வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-

தமிழகத்தில் 72.09%, ராஜஸ்தானில் 50.3%, உத்தரப் பிரதேசத்தில்57.5 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 63.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் அருணாச்சலப் பிரதேசத்தில் 67.5 சதவீதமும், சிக்கிம் மாநிலத்தில் 64.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இது அதற்கு முந்தைய 2014 தேர்தலில் கிடைக்கப்பெற்ற 303 சீட்களை ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். அதேபோல் இந்தத் தேர்தலில் அதிக சீட்களைக் கைப்பற்றி 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *