
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கியோஸ் படுகொலை!
கியோஸ் மீதான துருக்கிய படுகொலைகளுக்குப் பழிவாங்கும் விதமாக, ஜூன் 6, 1822 இரவு, கனாரிஸ் மற்றும் முப்பத்தாறு பேர் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் துருக்கிய அட்மிரல் காரா அலியின் கொடியினை அணுகினர்.அவர்கள் அவற்றை அட்மிரலின் கப்பலுடன் இணைத்து, உருகியை ஏற்றிவிட்டு பின் வாங்கினார்கள்.
2000 ஒட்டோமான் கடற்படை அதிகாரிகள், மாலுமிகள் அவர்கள் பிடித்து வைத்திருந்த கிரேக்க கைதிகள் உட்பட அனைவரும் கொல்லப்பட்டனர். அட்மிரல் மட்டும் சம யோசிதமாகத் தப்பித்து தண்ணீரில் குதித்தார், ஆனால் எதிரி ஸ்பாரால் கொல்லப்பட்டார்.

1822 மற்றும் 1824 க்கு இடையில், கனாரிஸ் துருக்கிய கடற்படைக்கு எதிராக மூன்று வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டார், ஒன்று நவம்பர் 1822 இல் டெனெடோஸில் மற்றும் 1824 இல் சமோஸ் மற்றும் மைட்டிலீனில். ஆகிய மூன்று போரின் போதும் எதிரியை நெருப்புக் கப்பலுடன் கோபத்துடன் நெருங்கி “கான்ஸ்டான்டி, நீ இறக்கப் போகிறாய் என்று ஆக்ரோஷமாகக் கத்துவார்.
கியோஸ் படுகொலையின்போது மொத்த கிரேக்க மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பேர் மரணம் அடைந்தார்கள். கிரேக்கர்களை அடிமைப்படுத்தியும் சித்ரவதை செய்து கொன்றனர்.
1822 இல் கிரேக்க சுதந்திரப் போரின்போது, சியோஸ் ஒட்டோமான் படைகள் கொடூரமான கொலைகளைச் செய்தது. சுற்றுப்புற தீவுகளிலிருந்து கிரேக்கர்கள் கியோஸ் வந்து, கிளர்ச்சியில் சேர அழைக்கப்பட்டர்கள். இவர்கள் தான் உண்மையிலேயே பூர்வீகக் குடிமக்கள்.அதே சமயம் ஒட்டோமான் படைகள் தீவில் தரையிறங்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர். கிறிஸ்தவர்களின் படுகொலை மேற்கு நாடுகளில் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றும் உலகெங்கிலும் கிரேக்க நோக்கத்திற்கான ஆதரவு பெருகியது.1822- மறக்க முடியாத ஒரு கொலைக் காவியமானது.





