பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற விஜய் வலியுறுத்தல்.!

ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், ஒன்றிய அரசின் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசலின் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.

இந்த விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *