Dharapuram By Election : களம் சூடேறுகிறது – அக்.2-இல் மு.க.ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்.!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, வரும் 2-ஆம் தேதி தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

தாராபுரம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து வரும் 2-ஆம் தேதி தி.மு.க.தவைர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் வரும் 1-ஆம்  தேதி கோவை செல்கிறார். அங்கு இரவு தங்கி விட்டு, 2-ஆம் தேதி கார் மூலம் தாராபுரம் தொகுதிக்கு செல்கிறார்.

அங்கு காரில் ரோடு ஷோ சென்று பொது மக்களை சந்திக்கிறார். மாலையில் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த பொதுக் கூட்டத்தில் தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரசார கூட்டத்திற்கு பிறகு மறுநாள் 3-ஆம் தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

இதையொட்டி மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *