த.வெ.க -வை பாஜக முடக்கி வைத்துள்ளதாகக் கூறுவது குற்றச்சாட்டு – வானதி

தமிழக வெற்றிக் கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளதாகக் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சுங்கத்தில் இந்திய கட்டடக்கலை வல்லுநர்கள் குழுமம் சார்பில் கட்டடக்கலைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி கலந்து கொண்டு பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி, ஒரு காலத்தில் செந்தில் பாலாஜியைத் திருடர் என்று ஸ்டாலின் கூறியதாகவும், இப்போது செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்த பிறகு அவரைத் தியாகி எனக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளதாகக் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்றும் வானதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *