
சிறுபான்மையினருக்கு பாஜக அரசு 3800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகக் கூறியுள்ள வேலூர் இப்ராகிம், திமுக அரசு ஏதாவது நிதி ஒதுக்கி உள்ளதா? என்று வினவியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக மாநில விவசாய அணித் துணைத்தலைவர் பண்ணைவயல் இளங்கோ இல்லத்திற்கு பாஜக தேசிய நிர்வாகி வேலூர் இப்ராகிம் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்று குற்றஞ்சாட்டினார். வேதனையில் இருக்கும் விவசாயிகளை வந்து சந்தித்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல், எங்கே ரயில் பெட்டிகளில் அரிசியையும் நெல்லையும் ஏற்றி செல்கிறார்களோ அந்த இடத்தில் போட்டோ சூட் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.
சிறுபான்மையினருக்காக பாஜக அரசு 3800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறிய இப்ராகிம், தமிழக அரசு சிறுபான்மையினருக்காக ஏதாவது நிதி ஒதுக்கி உள்ளதா? என்று வினவினார்.




