விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் பயிரிட அனுமதி! நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிரிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பணி தொடங்கும் வரை பயிரிட்டுக் கொள்வதாக விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டது என்று ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *